‘4 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ ஆத்திரத்தில் ஹாஸ்பிடலை அடித்து நொறுக்கிய மக்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 19, 2019 09:22 PM

டெல்லியில் 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபரைக் கைது செய்யக் கோரி மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

Ruckus at Delhi hospital over rape of 4 year old

டெல்லியில் பவானா என்ற 45 வயது மதிக்கத்த நபர் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை மகரிஷி வால்மீகி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த அவர்கள் அதனை அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மருத்துவமனை திடீரென தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GIRLBABY #HOSPITAL