புகைப்பிடிப்பவர்களே.. 'இனிமேலாச்சும்'.. 'இப்படி செய்யாம இருங்க'... நெஞ்சை உருக்கும் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 04, 2019 10:02 AM

பூமியில் ஒரு உயிரியின் வாழ்க்கை சுழற்சி இன்னொரு உயிரியின் செயல்பாடுகளைப் பொருத்து அமைகிறது. இதுவே உயிர் சுழற்சி. இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிப்பதற்கான உரிமை இன்னொரு உயிருக்கு இல்லை. குறிப்பாக இயற்கையோடு இணைந்து வாழும் பறவை இனமொன்றிற்கு மனித இனம் செய்யும் தீங்கும் இன்னும் கொடுமையானது.

please don\'t leave your butts behind,shocking photo

இதை உணர்த்தியிருக்கிறது சமீபத்தில் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு அரிய புகைப்படம். கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் கடந்த வாரம் ஃபுளோரிடா கடற்கரையில், கடந்த வாரம் பறவைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தாய், பிளாக் ஸ்கிம்மர் ரக பறவை ஒன்று தனது குஞ்சுப் பறவைக்கு இரை கொண்டுவந்து ஈந்தது.

ஆனால் அந்த இரையில் சிகரெட் பிடித்த மீதமுள்ள சிகரெட் கேப் (அடித்துண்டு) இருந்தது. ஆனால் அப்பறவைகள் அதையும் இரையென்று நினைத்துவிட்டன போலும். இதனை இணையத்தில் பகிர்ந்த, கரேன் புகைப்பிடித்த பின்னர் மீதமுள்ள துண்டினை அப்படியே விட்டுவிட்டுப் போகாதீர்கள் என்று பதிவிட்டுருந்தார். சாதாரண சிகரெட் துண்டுதானே என்று அலட்சியமாக இருந்தவர்கள் பலரையும் இந்த புகைப்படம் கண்கலங்க வைத்துவிட்டது.

சிகரெட்டின் அடித்துண்டு ஃபில்டர் செல்லுலோஸ் அசிடேட் என்கிற ஃபைரால் ஆனது என்பதால் அவை அவ்வளவு எளிதில் மக்குவதில்லை. 1980 முதல் கடலில் கலந்திருக்கும் 6 கோடி சிகரெட் துண்டுகளை கடல் சாரா அமைப்பொன்று தூர் வாரி எடுத்துள்ளது. எனவே இரை எது, இதுபோன்ற ஆபத்தானவை எது என கண்டுபிடிக்க முடியாமல் பறவைகள் திணறும் அவலத்தை இந்த புகைப்படம் நினைவூட்டியுள்ளது.

Tags : #BLACK SKIMMER #SHOCKING #SMOKE #CIGARETTE #BIRDS