‘போட்டிக்கு நடுவே நிர்வாணமாக ரசிகர் செய்த காரியம்’... ‘ அதிர்ச்சி வீடியோ’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 04, 2019 04:47 PM
இங்கிலாந்து, நியூசிலாந்து போட்டிக்கு நடுவே, ரசிகர் ஒருவர் செய்த அதிர்ச்சி காரியத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. கடந்த புதன்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நடைப்பெற்ற போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வுசெய்தது. பேர்ஸ்ட்டோ அதிரடியாக விளையாடி 106 ரன்களைக் குவித்தார். ஜேசன் ராய் 60 ரன்களும், மோர்கன் 42 ரன்களும் சேர்த்தனர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லாத்தம் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் டாம் லாத்தம் மற்றும் மிச்சல் விளையாடிக் கொண்டிருந்தப்போது, 33-வது ஓவரில் மைதானத்துக்குள் தலையில் தொப்பி மட்டும் அணிந்து, நிர்வாணமாக ரசிகர் ஒருவர் ஓடிவந்து சேட்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் முடியாமல் திணறினர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் நிர்வாணக் கோலத்தில் வந்த ரசிகரை, பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Well this went well. #CWC19 @RiversideDurham #EngvNl #streaker pic.twitter.com/3K0MVNrNcW
— Just Beef (@Ajk316) July 3, 2019
