'இறந்து 2 மணி நேரமாச்சு!'.. 'சென்னை விமான நிலையத்தில்'.. 'கண்கலங்க வைத்த சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 21, 2019 11:46 AM
சென்னை சேலையூரைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவரது மனைவி கீதா. ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்த தம்பதியருக்கு ரித்தீஸ் எனும் 6 மாத குழந்தை உள்ள நிலையில், கீதாவைப் பார்த்துக்கொள்வதற்காக கீதாவின் தாய் பிரிட்டோ குயின் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

அதன் பின் கீதா, தன் தாய் மற்றும் தன் குழந்தை ரித்தீஸ் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வழியாக, சென்னை விமான நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு அடைந்தனர். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் சோதனைக்காக காத்திருந்தபோதுதான், கீதாவின் குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளதை அறிந்தார்.
உடனே அவர் அங்கிருந்த விமான நிலைய மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று ஓடியுள்ளார். ஆனால் அங்கு, குழந்தை இறந்து 2 மணி நேரம் ஆனதாக மருத்துவர்கள் கூறியதால் கீதா நிலைகுலைந்துள்ளார். குழந்தையின் உடல் குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விமான நிலைய அதிகாரிகள், விமான ஊழியர்கள் மற்றும் கீதாவின் தாய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
