‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 06, 2019 11:14 AM

மும்பையில் 21 மாடிக் கட்டிடத்திலிருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai Angry With Husband Mother Flings Baby From 17th Floor

மும்பை புறநகர்ப்பகுதியான லால்ஜிபதா பகுதியில் குடிசை மாற்று வாரிய ஆணையத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட  அடுக்குமாடி குடியிருப்பில் இந்த நடுங்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. வியாழன் அன்று மதியம் ஏதோ சத்தம் கேட்டுச் சென்ற வாட்ச்மேன் கீழே விழுந்து கிடந்த குழந்தையின் உடலைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு சென்று மற்றவர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தூக்கி வீசப்பட்ட குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை எனவும், தொப்புள் கொடி கூட குழந்தையின் உடலிலேயே இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 21 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் 17 வது தளத்தில் வசித்துவந்த ஒரு பெண் தான் கணவர் மீதான கோபத்தில் குளியலறையில் குழந்தையைப் பெற்று, அங்கிருந்து அந்த பச்சிளம் குழந்தையைத் தூக்கி எறிந்து கொலை செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #MUMBAI #CRIME #MURDER #BABY #MOTHER #HUSBAND #FAMILY