‘பாட்டியை’ பிடித்து வைத்த ‘இன்ஜினியரிங் பட்டதாரி’.. தாயிடம் ‘பணம்’ கேட்டு செய்த அதிர்ச்சி காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 27, 2019 08:40 PM

காரைக்குடியில் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி தாயிடம் பணம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivagangai Son Threatens Mother To Commit Suicide For Money

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ராதா என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் சண்முகநாதன் என்ற மகன் உள்ளனர். தனியார் பள்ளியில் வேலை செய்துவரும் ராதா சண்முகநாதனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். ஆனால் படித்து முடித்து வேலைக்கு எதுவும் செல்லாத சண்முகநாதன் தாயிடமே பணம் வாங்கி செலவு செய்துவந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அவர் திடீரென தன் பாட்டியை உள்ளே வைத்து வீட்டை உள்புறமாகப் பூட்டிக்கொண்டு, வெளியில் இருந்த தாயிடம் ரூ.3.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து சண்முகநாதனை மீட்டுள்ளனர். பின்னர் போலீஸார் சண்முகநாதனுடைய மனநிலை பாதிப்பு குறித்து அறிய அவரை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #MONEY #SUICIDEATTEMPT #MOTHER #SON #GRANDMOTHER #SIVAGANGAI #ENGINEER