'வயிறு வலினு வந்து அட்மிட் ஆனாங்க... இப்ப இவங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கு'!.. கொரோனா மர்மம்!.. பெண் உயிரிழப்பால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 19, 2020 07:14 PM

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி வயிற்று வலி காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

chennai woman died of stomach illness tests positive postdeath

சென்னையில் மட்டும் 7,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று மட்டும் சென்னையில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 16 ஆம் தேதி வயிற்று வலி பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு அந்தப் பெண் அன்றைய இரவே 9 மணியளவில் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இப்போது மாதிரிகளின் முடிவு கிடைத்துள்ளது. அதில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக் கிடங்கில் இருக்கும் உயிரிழந்த பெண்ணின் உடலைப் பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.