எமனாக வந்த ‘தொட்டில் கயிறு’.. குழந்தைக்கு நடந்த கொடுமை.. சென்னையில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 24, 2020 06:16 PM

சென்னையில் தொட்டிலில் விளையாடிய குழந்தையின் கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai 11 year boy died when playing in Cradle

சென்னை எழும்பூரில் 11 வயது முகமது தெக்கி என்ற சிறுவன் தொட்டிலில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது தொட்டிலில் சுற்றி விளையாடும்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் வலியில் சிறுவன் துடித்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுவன் முகமது தெக்கிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஊரடங்கு சமயத்தில் தொட்டிலில் விளையாடிய குழந்தையின் கழுத்தில் எதிர்பாராதவிதமாக கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.