‘நடக்க முடியாது’!.. ஆனா உறுதியான ‘மனதைரியம்’.. கொரோனாவை துவம்சம் செய்து இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பாட்டி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
திண்டுக்கலை சேர்ந்த 25 வயது மூதாட்டிக்கு கடந்த 18ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மூதாட்டியின் வீட்டருகில் வசிக்கும் டெல்லி சென்று திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் மூதாட்டியின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மூதாட்டியை தவிர மற்ற யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக மூதாட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் முறிவின் காரணமாக மூதாட்டியால் நடக்க முடியாத நிலை, மேலும் வயது முதிர்வின் காரணமாக வரக்கூடிய உடல் பிரச்சனைகளும் இருந்தன.
இதனால் கடந்த இரண்டு வாராங்களாக மருத்துவமனையில் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அதிக வயதான பெண் இவர்தான். முன்னாதாக சென்னையை சேர்ந்த 84 வயது மூதாட்டியும், கன்னியாகுமரியை சேர்ந்த 88 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.