லாக்டவுனில் சொந்தஊருக்கு ‘தனியாக’ நடந்து சென்ற பெண்.. ‘பள்ளிக்கூடத்தில்’ தங்க வைத்த போலீசார்.. கடைசியில் நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 27, 2020 10:22 AM

ஊரடங்கால் பள்ளிக்கூடத்தில் தங்கிய பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman gang raped by three men after quarantining alone in school

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உணவு, இருப்பிடம் போன்ற பிரச்சனையால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாகவே செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக சொந்தஊருக்கு நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், தான் ஒரு கூழித்தொழிலாளி என்றும்,  ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு நடந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் தனியாக சென்றால் பாதுகாப்பு இல்லை என போலீசார் எண்ணியுள்ளனர். ஆனால் அப்பகுதியில் அரசாங்க மையங்கள் இல்லாததால் அருகில் உள்ள சவாய் மாதோபூர் கிராமத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அக்கிராம மக்களிடம் போலீசார் உதவி கேட்டுள்ளனர். இதனை அடுத்து அக்கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் அப்பெண்ணை தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கில் பாதுகாப்பிற்காக பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.