'4 வயது குழந்தையை...' 'சாக்லேட் வாங்கிக் கொடுத்து...' பாலியல் தொந்தரவு செய்த கோவில் பூசாரி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னிடம் கோவில் பூசாரி சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக 4 வயது சிறுமி பெற்றோர்களிடம் கூறியதை அடுத்து 70 வயதுடைய கோவில் பூசாரியை கைது செய்துள்ளனர் ஆரணி போலீசார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுகுமார் என்னும் 70 வயது முதியவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆரணியை அடுத்த ஒதலவாடி கிராமத்தில் உள்ள ஜெயினர் ஆலயத்தில் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் பூசாரியின் வீட்டிற்கு வெளியே அதே கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி ஒருவரின் 4 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அதன்பின் அவர் தன்னிடம் இருந்த சாக்லெட்டை கொடுத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.
பின்னர், வீட்டுக்கு திரும்பிய குழந்தை, பூசாரி சாக்லேட் கொடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், 4 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு தச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
உடனடியாக ஆரணி கிராமிய காவல்நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, கோவில் பூசாரி சுகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குழந்தை தன்மை மாறாத 4 வயது குழந்தைக்கு 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.