தள்ளிப்போன ‘கிராண்ட்’ வெட்டிங்... ‘கடமை’ தவறாத ‘காதலர்கள்’ செய்த காரியத்தால்... ‘வைரலாகும்’ திருமணம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் பணியில் உள்ள காதலர்களுக்கு திருமணம் செய்துகொள்ள நேரம் கிடைக்காததால் அரசு அலுவலகத்திலேயே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான துஷர் சிங்லாவும், ஐ.பி.எஸ் அதிகாரியான நவ்ஜோத் சிமியும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது துஷர் மேற்குவங்கத்திலுள்ள ஹௌராவில் மாவட்ட ஆட்சியராகவும், சிமி பாட்னாவில் டி.எஸ்.பியாகவும் உள்ளனர். தங்களுடைய திருமணத்தை பிராம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட இவர்களுக்கு குடிமைப் பணிகளில் இருப்பதால் அதற்கான நேரம் கிடைக்காமலேயே இருந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் காதலர் தினத்தன்று எளிமையாக துஷரின் அலுவலகத்திலேயே பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்காக சிமி மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு மேற்குவங்கம் சென்றுள்ளார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
