"உனக்கு நல்ல நேரம் தம்பி..." "நான் இந்த பக்கம் இருக்கேன்..." 'வீடியோ' எடுத்தவரை கண்களால் 'ஸ்நாப்' எடுத்த யானை... 'வனத்துறை' அதிகாரி வெளியிட்ட 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 19, 2020 04:05 PM

யானை ஒன்று படிக்கட்டுகளில் அழகாக ஏறிச் சென்று முறைத்து பார்க்கும் வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The elephant video released by a forest official has gone viral

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், தண்ணீர் இல்லாத வாய்க்கால் போன்ற ஓர் வழித்தடத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக யானை  ஒன்று கரைக்கு ஏறும் காட்சி பதிவாகியுள்ளது. 

32 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், ‘யானைக்கு வேறு வாய்ப்புகள் இல்லாததால் அது படிக்கட்டுகளை பயன்படுத்துகிறது.  அந்த யானையின் கடைசிப் பார்வை நிறைய உணர்த்துகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : #ELEPHANT #TWITTE #FOREST OFFICER #VIRAL VIDEO