VIDEO: ‘கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய்’!.. ‘ஆக்ரோஷமான மகன்’!.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Dec 12, 2019 11:45 AM
சாலையை கடக்கும்போது தாயின் மீது கார் மோதியதால் மகன் ஆக்ரோஷமாக காரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் பெண் ஒருவர் தனது மகனுடன் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது சிக்னலில் நிற்காத கார் ஒன்று அப்பெண்ணின் மீது மோதியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். தாய் காரில் அடிபட்டு கீழே விழுந்ததைப் பார்த்து மகன் வெகுண்டெழுந்து காரை எட்டி உதைத்தார்.
மேலும் ஆத்திரம் அடங்காத சிறுவன் அழுதுகொண்டே கார் உரிமையாளருடன் சண்டையிடுகிறான். தாய் மீது கொண்ட அதீத பாசம் கொண்ட சிறுவனின் இந்த செயல் பலராரும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
This little boy in China is his mummy's big hero - he vented his anger at a car that sent his mum flying pic.twitter.com/tCBNShmyHG
— SCMP News (@SCMPNews) December 11, 2019
Tags : #ACCIDENT #CAR #MOTHER #CHINA #SON #VIRALVIDEO
