‘தோசை கல்லால் அடித்துக் கொலை’!.. ‘பட்டப்பகலில் நர்ஸிங் சகோதரிகளுக்கு நடந்த கொடூரம்’! அதிரவைத்த சிசிடிவி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 13, 2019 02:37 PM

பட்டப்பகலில் விடுதி அறைக்குள் நுழைந்து தோசைக் கல்லால் நர்ஸிங் சகோதரிகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two nursing sisters murdered in Raipur chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள கோதாவரி அருகே தனியார் விடுதியில் மஞ்சு சிதார் மற்றும் மனிஷா சிதார் என்ற இரு சகோதரிகள் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்றுள்ளனர். அப்போது இரு இளைஞர்கள் விடுதி அறையில் இருந்து வேகமாக ஓடியுள்ளனர். இதனால் பதறி அடித்துக்கொண்டு அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு சகோதரிகள் இருவரும் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனை அடுத்து இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விடுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்துப் பார்த்துள்ளனர். அப்போது இரு இளைஞர்கள் விடுதிக்கு வெளியே ஓடியது தெரிந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் இருவரும் அப்பகுதியை சேர்ந்த சயீப் மற்றும் குலாம் முஸ்தபா என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சயீப், மஞ்சு சிதார் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மஞ்சு தனது கணவர் சயீப்பை பிரிந்து தனியாக வந்துள்ளார்.

இந்த நிலையில் மஞ்சுவின் சகோதரி மனிஷா ராய்ப்பூர் விடுதி ஒன்றில் தங்கி நர்ஸிங் படித்து வந்துள்ளார். ஏற்கனவே நர்ஸிங் படித்துள்ள மஞ்சு தனது சகோதரிக்கு பரீட்சை வருவதால் அவருக்கு உதவியாக கடந்த 10 நாட்களுக்கு முன் விடுதிக்கு சென்றுள்ளார். இதனிடையே மஞ்சு வேறொரு நபருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சயீப், தனது நண்பர் குலாம் முஸ்தபாவுடன் சேர்ந்து மஞ்சுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனால் ராய்ப்பூரில் உள்ள விடுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு மஞ்சு சிதாரிடம் சயீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்ததால் மனிஷா வெளியே சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். அறைக்குள் சத்தம் அதிகமாக கேட்டதால் மனிஷா உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சயீப் தனது சகோதரி மஞ்சுவை தோசைக் கல்லால் தலையில் அடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் தோசைக் கல்லால் தலையில் தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. இந்நிலையில் சயீப் மற்றும் குலாம் முஸ்தபாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #CCTV #WOMEN #RAIPUR #SISTERS