‘போட்டியின் நடுவே நொடியில் தாக்கிய மின்னல்’.. ‘சுருண்டு விழுந்த வீரர்கள்’.. ‘வைரலாகும் அதிர்ச்சி வீடியோ’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Sep 18, 2019 07:21 PM
ஜமைக்காவில் கால்பந்தாட்டத்தின்போது மின்னல் தாக்கியதில் 2 வீரர்கள் சுருண்டு விழும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

கிங்ஸ்டனில் ஜமைக்கா காலேஜ் அணிக்கும் வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும் இடையே கால்பந்தாட்டப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் திடீரென மின்னல் மின்னியுள்ளது. இதன் தாக்கத்தால் மைதானத்தில் இருந்த 2 வீரர்கள் தலையைப் பிடித்துக்கொண்டு ஒரே நேரத்தில் கீழே விழுந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு 2 வீரர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் மயக்கமடைந்த ஒரு வீரர் கண் விழித்த பின் பேச்சு வராமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் போட்டியின்போது வீரர்கள் மின்னல் தாக்கி கீழே விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Video has emerged of the moment players collapsed on the field after the lightening strike. pic.twitter.com/qbL7txxj4s
— William Mitchell (@news_mitchell) September 16, 2019
