விநாயகர் 'ஊர்வலத்தில்' புகுந்து 'நொடியில்' வெளியேறிய ஆம்புலன்ஸ்-வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 13, 2019 02:41 PM

லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் ஒன்று, நொடியில் வெளியேறிய சம்பவம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Devotees show humanity by giving way to ambulance-watch video

விநாயகர் சதுர்த்தி விழா வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். சுமார் 10 நாட்கள் வரை சதுர்த்தியை கொண்டாடி அதன்பின்னர் தான் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பர். அந்தவகையில்  புனேவைச் சேர்ந்த பகுதியொன்றில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அப்போது அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்தது. ஆம்புலன்ஸ் ஒலியைக் கேட்ட விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று மக்களிடம் வழி விடுமாறு கேட்டுக்கொண்டனர்.இதற்கான அறிவிப்புகள் மைக்கிலும் சொல்லப்பட்டது.

 

அறிவிப்பு வெளியான சில நொடிகளில் மக்கள் விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி விட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் எந்த வித சிரமமும் இன்றி அவ்வளவு கூட்டத்தையும் எளிதாக கடந்து சென்றது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Tags : #VIDEO #AMBULANCE