‘திடீரென கூண்டுக்குள் இருந்து எகிறி குதித்த புலியால்’.. ‘அலறியடித்து ஓடிய கூட்டம்’.. ‘பின்னர் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 10, 2019 05:17 PM

சர்க்கஸ் நிகழ்ச்சியின் நடுவே சாகசம் செய்துகொண்டிருந்த புலி ஒன்று கூண்டை விட்டு எகிறி குதித்து வெளியேறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tiger escapes cage during circus show in China Viral Video

சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சியில் சைபீரிய புலி ஒன்று சாகசத்தில் ஈடுபட்டுள்ளது. அப்போது கூண்டுக்குள் வலம் வந்துகொண்டிருந்த புலி திடீரென கூண்டிலிருந்து வெளியில் எகிறி குதித்து பார்வையாளர்களை நோக்கி ஓடியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

பின்னர் கூண்டிலிருந்து வெளியேறிய புலி சாலையில் செல்லும்போது கார் மோதியதில் காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலி கூண்டை விட்டு வெளியேறியதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CHINA #CIRCUS #TIGER #CAGE #CROWD #SHOCKING #VIRAL #VIDEO