WATCH VIDEO: 'பர்ஸையா புடுங்குற'.. திருடனிடமே 'ஆட்டையப்' போட்ட 'பலே' கில்லாடி!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Sep 18, 2019 12:18 PM
சில வீடியோக்கள் பார்த்தவுடனேயே சிரிப்பை எக்கச்சக்கமாக வரவழைக்கும். அதுபோன்ற வீடியோக்களை மீண்டும்,மீண்டும் பார்த்து சிரித்துக்கொண்டு இருப்போம்.

Thieves steals thieves🤣 pic.twitter.com/vhuzhPcltp
— Gaml. Y (@GY18164253) September 16, 2019
அதுபோல ஒரு வீடியோ ட்விட்டரில் செம வைரலாகியுள்ளது.அதாவது இதுவரை சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்து வயிறுகுலுங்க சிரித்துள்ளனர்.விஷயம் இதுதான் சாலையில் பெண் ஒருவர் நடந்து செல்ல,அங்கு ஸ்கூட்டியில் வரும் ஒரு திருடன் ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு அந்த பெண்ணிடம் வந்து பர்ஸைப் புடுங்க முயற்சி செய்கிறான்.
உடனே அந்த பெண் தனது பர்ஸைத் தூக்கி தூர எறிகிறார்.திருடன் பர்ஸை எடுக்கச் செல்லும் நேரத்தில் அவனது ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு செல்கிறார்.இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பாராட்டும் அதேநேரத்தில்,இது ஏற்கனவே திட்டமிட்டது போல உள்ளது என்றும் ஒருதரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
