"இந்தியாவுக்கு சல்யூட்"... "ரிஸ்க்கான டைம்ல கூட 'மாஸ்' பண்றாங்க"... மத்த நாடுங்களும் இத ஃபாலோ பண்ணா நல்லாயிருக்கும்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், கொரோனா தொற்று சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரகுயின் மாத்திரைகளின் தேவை அதிகரித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கோரிக்கையை ஏற்று மருந்துகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றி இந்தியா அமெரிக்காவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தது. இந்தியாவின் இந்த உதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரகுயின் மாத்திரைகளை தந்து உதவ இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதனால் சுமார் 55 நாடுகளுக்கு இந்திய அரசு வர்த்தக அடிப்படையில் மருந்துகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கை மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் இதன் மூலம் பலன் அடைந்து வருகின்றன.
இந்தியாவின் இந்த செயலுக்கு ஐ.நா. பொது செயலாளர் ஆன்டோனியோ கட்டாரஸ் மனம்திறந்து பாராட்டியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்து வரும் இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என ஆன்டோனியோ தெரிவித்துள்ளார். இதற்காக இந்திய அரசிற்கும், பிரதமர் மோடிக்கும் சல்யூட் அடிக்கிறேன். இந்திய நாட்டை போல மற்ற நாடுகளும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர மனிதாபிமான உதவிகளை மற்ற நாடுகளுக்கு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.