'மனைவி' நடத்தை மீது சந்தேகம் ... 'கணவரின்' கோபத்தால் ... பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் காலு நாயக். காலு நாயக்கிற்கு மஞ்சுளா என்ற பெண்ணுடன் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் ஏழாவதாக குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி சந்தேகத்துடன் காலு நாயக் சண்டையிட்டுள்ளார்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாற, கோபத்தில் கோடாரியை எடுத்து தூங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை வெட்டிய காலு நாயக், பின்னர் மனைவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். கோடாரியின் மூலம் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காலு நாயக்கை கைது செய்தனர். காயமடைந்த மனைவியையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவன் மனைவி இடையே நிகழ்ந்த தகராறால் குழந்தை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
