உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 18, 2020 05:46 PM

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தேதிகளை ஏர் இந்தியா அறிவித்துள்ளத்து.

Lockdown AirIndia Opens Domestic International Flight Bookings

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்துமே மூடப்பட்டு, போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா உட்பட அனைத்து விமானங்களும் பயணிகள் சேவையை முழுமையாக நிறுத்தியுள்ள நிலையில், சரக்கு விமான போக்குவரத்து மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமான சேவைக்கு மே 4ஆம் தேதி முதலும், வெளிநாட்டு விமான சேவைக்கு ஜுன் 1ஆம் தேதி முதலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.