13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆரோக்கிய சேது ஆப்! || இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள் - சுகாதாரத்துறை ||

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 15, 2020 08:26 PM

1. ஆரோக்கிய சேது ஆப் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சுற்றுப்புறத்தில் இருந்தால் ஸ்மார்ட்போன்  லொக்கேஷன் மூலம் இந்த ஆப் வைத்து கண்டறிய முடியும். இந்தச் செயலி வெளியானது முதல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Important news information in one line 15th Evening

2. தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 38 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.

3. எச்-1பி விசா தொடர்பான விதிகளை தளர்த்தி, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

4. இந்தியாவில் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5. சென்னையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

6. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை வெடிகுண்டை போன்றது என்றும், அது வெடிக்கும் முன்பு தணிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

7. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் சீசன் 2020 காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

8. உலக கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை என்றால், மகேந்திர சிங் தோனிக்கு சிக்கல் அதிகமாகிவிடும் என முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். 

9. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.