'இந்தியாவில்' கொரோனா பாதிப்பு... 'மே' மாதம் 'உச்சத்தை' தொட வாய்ப்பு 'ஆனால்'... வெளியாகியுள்ள 'கணிப்பு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 17, 2020 05:38 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மே மாதம் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு பாதிப்பு குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

India Corona Peak Expected In May Lockdown Helped Cut Numbers

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது உள்ள நிலையே நீடித்தால் இந்தியாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு பாதிப்பு குறையும் எனவும் உள்துறை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ஆனால் ஊரடங்கை இப்போது உள்ளதை விட கடுமையாக பின்பற்றினால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் இருந்து மருத்துவ பரிசோதனை கருவிகள் இந்தியா வந்துள்ளதையடுத்து நாடு முழுவதும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, சுவாச பிரச்சனை தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட உள்ளது. நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இதுவரை கொரோனாவுக்கென தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த சமூக விலகல் ஒன்றே தீர்வு எனவும் கூறப்பட்டுள்ளது.