'இந்தியாவில்' பரிசோதிக்கப்படும்... 'எத்தனை' பேரில் ஒருவருக்கு பாதிப்பு?... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன?...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 24 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 24 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கொரோனா பாதிப்புள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான சதவீதம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் பரிசோதனை செய்யப்படும் 11.7ல் ஒருவருக்கும், இத்தாலியில் பரிசோதனை செய்யப்படும் 6.7ல் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படும் 5.3ல் ஒருவருக்கும், பிரிட்டனில் பரிசோதனை செய்யப்படும் 3.4ல் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
