"என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்"... 2000 'கி.மீ' தொலைவில்... உயிரிழந்த "கணவர்"... கலெக்டர் செய்த உதவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 17, 2020 10:46 PM

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு ரெங்கநாயகி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். சுப்புராஜ் குஜராத் மாநிலம், சூரத்தில் கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார்.

Husband died in Gujarat and Tirunelveli Collector helps

இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி, சுப்புராஜ் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளதாக தெரிகிறது. அவருடன் வேலை செய்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ரெங்கநாயகியை அழைத்து தனது கணவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டி உடனே கிளம்பி வரவும் ரெங்கநாயகியை வற்புறுத்தியுள்ளனர். கணவரின் உடல்நிலை அறிந்து அதிர்ச்சியடைந்த ரெங்கநாயகி, ஊரடங்கு சமயத்தில் எப்படி குஜராத் செல்வது என தவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் ரெங்கநாயகி கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக, சூரத் மாவட்டத்திலுள்ள கலெக்டருக்கு அழைத்து சுப்புராஜின் நிலை குறித்து அறிந்த நெல்லை கலெக்டர், ரெங்கநாயகி குடும்பத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புராஜ் உயிரிழந்துள்ளார். இந்த தகவலறிந்து மனமுடைந்த ரெங்கநாயகி, ஊரடங்கின் காரணமாக தனது கணவரின் உடலை இறுதியாக காண முடியுமா என எங்கியுள்ளார். இதையறிந்து நெல்லை கலெக்டர் எடுத்த நடவடிக்கையால் உதவியால் சுமார் 2,000 கிலோமீட்டரில் இருந்து சுப்புராஜ் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது.