"இனிமே சரிப்பட்டு வராது"... "பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவல் குறையாததால் ஏப்ரல் மாதம் 14 - ம் தேதி வரை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக நாடு முழுவதும் தொழில்கள் முடக்கப்பட்டுள்ளதால் வேறு மாநிலங்களில் தொழில் செய்து வரும் கூலி தொழிலாளர்கள் பணம் மற்றும் உணவு கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்றனர்.
இந்நிலையில் தற்போது 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு செல்ல சைக்கிள் மூலம் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த மாதம் 14 - ம் தேதி ஊரடங்கு முடிந்ததும் பஸ் அல்லது ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என நினைத்தோம். ஆனால் தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து நாட்களுக்கு முன்னதாக சைக்கிளில் எங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினோம். இன்னும் ஆறு நாட்களில் சொந்த ஊர் சென்றடைவோம்' என தெரிவித்துள்ளனர்.
இதைப் போல ஒரு தம்பதியர் தங்களது ஒரு வயது குழந்தையுடன் சைக்கிளில் சொந்த ஊர் செல்ல பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.