'அன்னைக்கு நம்ம டீமுக்காக' ... 'இப்போ நாட்டுக்காக' ... போலீஸ் பணியில் ஜோகிந்தர் சர்மா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 14, 2020 11:05 AM

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றனர்.

Joginder Sharma explains about his duty as Police

2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி 20 உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர் ஜோகிந்தர் சர்மா. கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற ஜோகிந்தர் சர்மா, ஹரியானா மாநில காவல் துறையில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வருகிறார். ஊரடங்கின் போது ஹரியானா மாநிலத்தில் பணியில் இருந்த ஜோகிந்தர் சர்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் போலீஸ் பணி குறித்து ஜோகிந்தர் சர்மா கூறுகையில், '2017 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்றியதில் தற்போதைய காலகட்டம் மிகவும் கடினமானது. 24 மணி நேரமும் எதற்காகவும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். தினமும் மக்களிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து வலியுறுத்துவேன். மக்கள் பாதுகாப்பாக இருப்பதை போல காவலர்கள் நாங்களும் கவனமாக இருக்க வேண்டும். தினமும் பல்வேறு மக்களை சந்திக்கும் நிலையுள்ளதால் எனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வருகிறேன். நான் காரணம் என் குடும்பத்தில் யாருக்கும் எதுவும் ஆகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்' என்றார்.