இந்தியாவில் 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனாவால் பலி || 6 லட்சத்தை கடந்த வைரஸ் பரவல் - அதிர்ச்சியில் உறைந்துள்ள நாடு || இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 15, 2020 11:35 AM

1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 38 பேர் பலியாகி உள்ளனர்.

important one line news for today 15th read here for more Details

2. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

3. ஏப்ரல் 20-ந்தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

4. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

5. ஊரடங்கு உத்தரவை 3-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது சோதனையான காலத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கூறி இருக்கிறது.

6. மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும். 

7. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.

8. கோவை அருகே பொதுமக்களுக்கு உணவு வழங்கிய முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 40 போலீசார் உள்பட 100 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

9. என்னை பொறுத்தவரை ஆட்டத்தை வெற்றிகரமான முடிப்பதில் கிரிக்கெட் உலகம் உருவாக்கிய தலைச்சிறந்த வீரர்  தோனி தான் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி புகழாரம் சூட்டியுள்ளார்.

10. ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டி நடந்தால் விராட் கோலியின் நடவடிக்கை எந்த மாதிரி இருக்கும் என்பதை காண ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார்.

11. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

12. எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு ரஜினி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13. கொரோனா விழிப்புணர்வு தகவல்களை அனுப்பி நட்பாக பழகி, சென்னை பெண்ணின் படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக பணம் கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

14. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

15. க்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.