நேசமணியை அடுத்து டுவிட்டரில் டிரெண்டாகும் #SAREETWITTER காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 17, 2019 12:47 PM

டிவிட்டர் #SareeTwitter என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Saree Twitter hashtag trending on Twitter

இந்தியா முழுவதும் பெண்களுக்கான உடை என்றால் முதலில் எல்லோரும் சொல்வது சேலைதான். நாளுக்கு நாள் விதவிதமான நவநாகரீக உடைகள் வந்தாலும் பாரம்பரிய ஆடையான சேலையை பெண்கள் அதிகமாக விரும்பி அணிந்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த இரண்டு நாள்களாக டுவிட்டர் #SareeTwitter என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் டிரெண்டாகி வருகிறது.

நேற்று டுவிட்டரில் ஒரு கணக்காளர் தான் புடவை கட்டியதை நண்பர்களுக்கு பகிர்வதற்காக #SareeTwitter என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு தனது புகைப்படதை ஷேர் செய்துள்ளார். இதனை அடுத்து அவரது நண்பர்களும் இதேபோல் பகிற இந்தியா முழுவதும் பெண்கள் தங்களது புகைப்படங்களுடன் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட தொடங்கியுள்ளனர்.

இதனை அடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் தாங்கள் சேலை கட்டிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது வெளிநாட்டினரும் சேலை அணிந்த புகைப்படத்தை ஐ லவ் சரீ என பதிவிட்டுள்ளனர். முன்னதாக #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Tags : #SAREETWITTER #WOMEN