‘மகனைக் காத்து, 27 வருஷம் கோமாவில் இருந்த அம்மா’.. மீண்டபோது சொன்ன முதல் வார்த்தை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Apr 24, 2019 03:31 PM

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முனிரா அப்துல்லா என்பவர், கடந்த 1991-ஆம் ஆண்டு தனது 4 வயது மகன் ஓமரை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக தனது மைத்துனருடன் காரில் சென்றார்.

son gets more emotional when his mother return to normal from coma

இந்நிலையில், தன் மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் போது அல் - ஐன்  பகுதியில் பேருந்து மீது கார் மோதியது. அப்போது முனிரா தன் மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரை கட்டி அணைத்துக்கொண்டார். இதனால் ஓமர் காயமின்றி தப்பிக்க முனிராவிற்கு  தலையில் பலமாக அடிப்பட்டதால்  அவருக்கு மூளை பாதிப்பு உண்டாகியது.

அப்போது சிகிச்சைக்காக லண்டன் அழைத்து செல்லப்பட்ட முனிரா கோமாவில் இருப்பதாகவும், மேலும் அவரால் வலியை மட்டுமே லேசாக உணர முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர் தனது சொந்த நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு செயற்கை சுவாச கருவியினால் தனது மீதி வாழ்க்கையை வாழத் துவங்கினார். இதனைக் கண்டு அவரது மகன் ஓமர் தன்னால் தனது தாயார் இப்படி வாழ்ந்து வருவதைப் பார்த்து மிகவும் கவலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது குடும்பத்தின் கஷ்டத்தை அறிந்த அபுதாபியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயீத் அரசு செலவில் முனிராவை ஜெர்மனிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உதவியுள்ளார். இதனையடுத்து ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்ட முனிராவிற்கு கடந்த ஒரு வருடமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் அடைந்தது.

இதனையடுத்து கடந்த ஒரு வருட சிகிச்சையின் பலனாக சில நாட்களுக்கு முன்னர் விநோதமான சப்தங்களை முனிரா எழுப்பியுள்ளார். இந்த சத்தத்தை எழுப்பத் தொடங்கிய 3-வது நாளில் அவர் பேச தொடங்கியுள்ளார். அவர் பேசிய முதல் வார்த்தை அவரது மகனின் பெயர் ஓமர் என்பதே ஆகும்.

இதனை கேட்ட அவரது மகன் ஓமர் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துள்ளார். தனது கண் எதிரே தாயாருக்கு நிகழ்ந்த அந்த விபத்தில் இருந்து தனது தாய் செயல்பட முடியாமல் பல  ஆண்டுகளாக கோமாவில் இருந்து நிலையில், தற்போது அவர் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது ஓமரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இதனையடுத்து  ஓமர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக  திகழ்கிறார்.

சிறுவனாக இருந்த ஓமர் தற்போது 32 வயதுடைய இளைஞராக உள்ளார். அவரது தாயாருக்கு தற்போது 59 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #UAE #EMOTIONAL #MOTHER AND SON BONDING