‘மின்விசிறியில் சடலமாக தொங்கிய பெண்’ ‘வெளியான கள்ளக்காதலன் நடத்திய நாடகம்’.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 12, 2019 11:55 AM

சென்னையில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Man arrested for killing his illegal affair woman in Chennai

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பெண் ஒருவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் பெயர் மோகனா (38) என்பதும், ரயில்வேயில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவருடன் கடந்த மூன்று வருடங்களாக மோகனா பழகி வந்தாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீராசாமி தான் கட்டியிருந்த வேஷ்டியால் மோகனாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மோகனா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை மறைக்க மோகனா தற்கொலை செய்து கொண்டது போல் அவரது புடைவையால் கட்டி மின்விசிறியில் தொங்கவிட்டிள்ளார். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் வீராசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #WOMEN #ILLEGAL AFFAIR #KILLED