‘எனது கணவர் ஒரு போதை அடிமை’... ‘ராதையாக நினைத்துக்கொண்டு’... ‘பகீர் புகார் கிளப்பிய மனைவி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 07, 2019 12:13 PM

லாலு பிரசாத் மகனும், பீகார் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் மீது, அவரது மனைவி ஐஸ்வர்யா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Tej addicted to marijuana, Wife Aishwarya during divorce plea

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின், மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் அம்மாநில மற்றொரு முன்னாள் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும், கடந்த வருடம் மே மாதம் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்த 5 மாதங்களில் விவாகரத்து கோரி, தேஜ் பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இருவரது குடும்பத்தினரும் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் தேஜ் பிரதாப்பின் மனைவி ஐஸ்வர்யா ராய், குடும்ப நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் 'எனது கணவர் தேஜ் பிரதாப் யாதவ் மிக அதிகமான அளவிற்கு கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டார். சிவனின் அவதாரமாக தன்னைக் கருதிக் கொள்ளும் தேஜ் பிரதாப், மரிஜுவானா எனப்படும் கஞ்சாவை பயன்படுத்தி வருகிறார். மேலும், சில நேரங்களில் தன்னை ராதையாக கருதுவதுடன், பெண்கள் அணியும் உடையை அணிந்து கொள்கிறார்’ என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

‘இத்தனை நாட்களாக வெவ்வேறு வகைகளில் அவரைத் திருத்த முயற்சிகளை மேற்கொண்டேன். இதுதொடர்பாக லாலு குடும்பத்தினரிடம் தெரிவித்த போதிலும், அவர்கள் தனக்கு எந்த உதவியோ, ஆதரவோ அளிக்கவில்லை. தனது கல்வித் தகுதி பற்றி எப்போதும் மட்டம் தட்டியே பேசும் தேஜ் பிரதாப், சமைப்பதற்காகவும், குழந்தைகளை வளர்ப்பதற்காகவும் மட்டுமே, இறைவன் பெண்களை படைத்துள்ளதாகவும் அடிக்கடி கூறுவார்.  இதனால் நான் மனதளவில், உடலளவில் மற்றும் உணர்ச்சி பூர்வமாகக் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளேன். எனக்கு மீட்புத் தேவை‘ என்று தனது மனுவில் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

Tags : #BIHAR #LALUPRASADYADAV #TEJPRATAPYADAV #ISHWARYAROY #DIVORCE