மனைவியை விவாகரத்து செய்ய காரணமான 8 லட்டு’.. மிரள வைத்த விநோத சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 20, 2019 07:20 PM

கணவன், மனைவிக்கு இடையே விவாகரத்து ஏற்பட லட்டு காரணமாக இருந்த விநோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

UP man seeks divorce, says wife only gives him laddoos to eat

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் திருமணமாகி 10 வருடங்களான தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி ஒரு மந்திரவாதியிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார்.

அவர் தினமும் கணவருக்கு காலை 4 லட்டுகளும், மாலை 4 லட்டுகளும் உணவாக கொடுக்க வேண்டும். இடைப்பட்ட வேளையில் உணவு ஏதும் கொடுக்க கூடாது என சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் 8 லட்டுகளை மட்டுமே உணவாக உண்டு வெறுத்துப்போன கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் தர முடிவு செய்து கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பியுள்ளார். இவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த ஆலோசகர், அப்பெண் மூடநம்பிக்கையை தீவிரமாக பின்பற்றுகிறார். அதனால் லட்டு சாப்பிட்டால் தனது கணவரின் உடல்நிலை குணமடைந்துவிடும் என நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : #DIVORCE #WIFE #LADDU #HUSBAND