'இருங்க அங்கிள்.. இதயும் சேத்து வாங்கிக்கங்க'.. முதல்வர் உட்பட அத்தனை பேரையும் நெகிழவைத்த சிறுமியின் வைரல் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 26, 2019 05:34 PM

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்குப் பருவ மழையினால், பலரும் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடு வாசலை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Pinarayee Vijayan Praises a little girls heart melting act

குறிப்பாக வயநாடு, மலப்புரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்தியா முழுவதிலிருந்தும்  நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முதலமைச்சர் பினராயி விஜயனைசந்தித்த அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் சி.பி.எம் தலைவர்களிள் ஒருவருமான ஸ்ரீமதி சந்தித்தார்.

அப்போது தன் கையில் அணிந்திருந்த தங்க வயல்களை கழட்டி முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கினார். மாநிலம் முழுவதும் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஸ்ரீமதி தொடங்கிய இந்த தங்க சேலஞ்ச் பிரபலமானது.

இதனையடுத்து லாரன்ஸின் 90வது பிறந்த நாள் விழாவிற்கு, முதல்வர் எர்ணாகுளம் வருவதை அறிந்தவுடன், தன் தந்தையிடம் கட்டாயப்படுத்தி தன்னை அழைத்துப்போகச் சொல்லி அடம் பிடித்து அங்கு சென்ற லியானா தேஜூஸ் என்கிற 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வரிடம் நிவாரணமாக அளித்தார்.

அதன்பின் இரண்டு அடி பின்னால் வந்து நின்றுவிட்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘வெயிட் பண்ணுங்க அங்கிள்’ என்று சொல்லி பரபரப்பை கிளப்பினார். தன் காதில் இருந்த காதணியை கழட்டியபடி, ‘இதையும் வாங்கிக்கோங்க’என்று கொடுத்துவிட்டார். அந்த குழந்தையின் இந்த பெரிய மனிதத் தன்மையை பாராட்டி முதல்வர் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags : #KERALAFLOOD #KERALA #PINARAYIVIJAYAN #GIRL #CHIEFMINISTER