'நேத்து இரவுல வந்த மாதிரி நைட்ல வரேன்'.. பேரம் பேசும்போது ரோல் ஆன திருடன்.. 'சிரிச்சு.. சிரிச்சு.. முடியலடா சாமி'...வைரல் ஆடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 10, 2019 04:29 PM

செல்போன் திருடன் ஒருவன், உரிமையாளர் வீட்டிற்கு போன் செய்து பேரம் பேசுவதும், எப்போது வேண்டுமானாலும் நீங்க எனக்கு போன் பண்ணுங்க என்று சலுகையெல்லாம் கொடுப்பதுவுமான ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Thief bargains with the owner for the phone he stole from him

அந்த ஆடியோவில் உரிமையாளரும் திருடனும் பேசிக்கொண்டவை,

உரிமையாளர்: நீங்க எடுத்துக்கொண்டு போனது எங்க அக்காவோட போன் தான்.

திருடன்: அப்படியா? சரி அதை நான் கண்டிப்பா குடுக்குறேன். ஆனா நீங்க 6 ஆயிரம் பணம் குடுத்துருங்க?

உரிமையாளர்: குடுக்குறங்க. நான் எங்க வந்து தரணும்னு சொல்லுங்க?

திருடன்: சரி.. நான் இன்னைக்கு எடத்த சொல்றேன் நானு.. சரியா? அதே மாதிரி பகல்ல முடியாது. நேத்து இரவுல(தூய தமிழு..) வந்தேன்ல அதே மாதிரி நைட்லதான் வருவேன். அந்த எடத்த சொல்லுவேன். சொன்னதும் நீங்க வந்துரணும்.

உரிமையாளர்: சரிங்க. அவங்க பால்வாடியில வேலை செய்றாங்க. அது கவர்மெண்ட் செல்போனு. அதான் கேக்குறேன். அதுக்கு கணக்குலாம் குடுக்கணும்.

திருடன்: ஓ.. கவர்மெண்ட் செல்லுன்னா என்ன? பால்வாடியில வேலை செய்றாங்களே.. அங்க தந்ததா.. சரி.. நா குடுத்துடுறேன். நா ஏமாத்தல்லாம் மாட்டேன். எனக்கு தேவ பணம்.. குடுத்துடுறியா?

உரிமையாளர்: ஆமா.. பணம் குடுத்துடுறேங்க.. சரி காசு எதனாது எடுத்துக்கிட்டீங்களா?

திருடன்: ஆமா, 16 ஆயிரம் இருந்தது. அவ்ளோதான்.

உரிமையாளர்: ஏங்கண்ணா.. அதான் செல்லு எடுத்துட்டு போனீங்களே? பணம் வெச்சிருந்துருக்கலாம்ல.. இல்ல பணத்த எடுத்துட்டு போனீங்களே.. காசு வெச்சுட்டு போயிருக்கலாம்ல?

திருடன்: அதான்யா மைண்ட்லா ஏறல.. நெனைச்சேன்.. (அப்டியே விட்டுட்டேன்.. ரெண்டையும் எடுத்துட்டு வந்துட்டேன்)

உரிமையாளர்: ஒரே வீட்ல இவ்ளோ ஆட்டய போடலாமா? உனக்கு மனசாட்சி இல்லயா?

திருடன்: (சிரிக்கிறார்) உண்மைதான்.

இதன் பிறகு இருவரும் 7 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம், 5 ஆயிரம் என பேரம் பேசி ஒருவழியாக நைட்டுக்குள்ள 5 ஆயிரம் புரட்டி நாளைக்கு குடுங்க என அந்தத் திருடன் பேரத்தை பேசி முடிக்கிறான். இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சிரிக்க வைத்து, உண்டதையெல்லாம் செரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

Tags : #VIRAL #AUDIO #CELLPHONE #THIEF #THEFT