‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 09, 2019 12:39 PM

சென்னையில் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதைப் பார்த்த நபர் தலையில் அடித்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

Chennai Thief leaves empty handed after being caught on CCTV

சென்னை சிட்லப்பாக்கம் ஜெயா நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஸ்ரீதர் என்பவருடைய வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். கையில் இரும்புக் கம்பியுடன் வந்த அந்த நபர் வெளிக் கதவின் பூட்டை உடைக்கும்போது கதவின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவைப் பார்த்து விடுகிறார்.

பின்னர் வேறு வழியின்றி அவர் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து எதையும் திருடாமல் சென்றுள்ளார். வெளியூர் சென்றிருந்த ஸ்ரீதர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இதை அவர் பார்த்துள்ளார்.  இந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு சிட்லப்பாக்கம் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #APARTMENT #THIEF #CCTV #VIDEO #VIRAL