‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Sep 21, 2019 07:24 PM
கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடனை 11 வயது சிறுமி விரட்டியடித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 16ஆம் தேதி இரவு கையில் கத்தியுடன் ஒரு திருடன் நுழைந்துள்ளான். அப்போது தந்தையுடன் அங்கு ஷாப்பிங் வந்திருந்த 11 வயது சிறுமி ஒருவர் அந்த திருடனின் முகத்தில் பிரட் பாக்கெட்டுகளை வீசித் தாக்கியுள்ளார்.
சிறுமியின் தீடீர் தாக்குதலால் திணறிய அந்த திருடன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டுள்ள சஸ்ஸெக்ஸ் நகர போலீஸார் திருடனை தேடி வருவதாகக் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோவால் சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Tags : #UK #ENGLAND #GIRL #THIEF #BREAD #KNIFE #STORE #VIRAL #VIDEO #POLICE
