'இந்த நேரத்துல எப்படி வேன்'ல 30 பேர்'...'கோரமாக மோதிய கண்டெய்னர்'...சல்லி சல்லியா தெறித்த உடல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 16, 2020 09:32 AM

வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர், உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tanzania : Head-on collision kills 18, injures 15

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று தான் தான்சானியா. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான தான்சானியாவில் சாலை வசதி என்பது மிகவும் குறைவு. அதோடு அங்குச் செல்லும் லாரிகளில் கணக்கே இல்லாமல் பாரம் ஏற்றிச் செல்வது என்பதும் அதிகம். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் டார் எஸ் சலாம் நகரில் உள்ள சாலையில் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. ஹிலிமஹீவா என்ற கிராமத்தின் அருகில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் தூக்கி வீசப்பட்டது. கண்டெய்னர் லாரியில் அதிக பாரம் இருந்ததால், வேன் மோதியதும் அதிலிருந்தவர்களின் உடல்கள் சாலையில் சிதறி விழுந்தது.

உடலை நடுங்கச் செய்யும் இந்த கோர விபத்தில் சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே தற்போது கொரோனா அச்சம் காரணமாக சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், எப்படி வேனில் 30 பேர் வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.