'மச்சான் டயர் பஞ்சர் ஆயிடுச்சு'... 'பைக்கை ஓரமா ஒதுக்கு டா'... அடுத்த கணம் காத்திருந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 31, 2020 06:52 PM

பஞ்சர் ஆன இருசக்கர வாகனத்தின் டயரை மாற்ற முயன்ற நண்பர்கள், வேன் மோதி இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona Lockdown : Two youngsters die after Ambulance hits bike

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெற்றியூர் கிரா மத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவருடைய மகன் சூர்யகுமார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் பத்மநாபனும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் சூர்ய குமாரும், பத்மநாபனும் நேற்று முன்தினம் இரவு திருமானூரில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார்கள்.

பின்னர் மருந்து வாங்கி கொண்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் பாலம் அருகே சென்றபோது, அவர்களது மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் திடீரென பஞ்சரானது. இதையடுத்து சூர்யகுமாரும், பத்மநாபனும் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு டயரை கழற்ற தொடங்கினர்.

அந்த நேரம் தாய்-சேய் நல வாகனம் ஒன்று அவர்களுக்கு எதிரே வேகமாக வந்தது. இதையடுத்து இருவரும் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மீது மோதியதோடு நிற்காமல் கட்டுப் பாட்டை இழந்து அருகில் இருந்த வயல்வெளிக்குள் சென்று கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார்.

இதுதொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மருந்து வாங்க சென்ற நண்பர்கள் தாய்-சேய் நல வாகனம் மோதி இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CORONAVIRUS #CORONA #AMBULANCE #CORONA LOCKDOWN #ARIYALUR