'திருமணத்திற்கு' சென்று திரும்பியபோது... திடீரென 'பல்டியடித்த' டிராக்டர்... அடுத்து நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 20, 2020 01:28 PM

திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய போது டிராக்டர் திடீரென கவிழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.

5 people died on Tractor Accident, Near Bellary District

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹூவினகடஹள்ளி அருகேயுள்ள கோலலு கிராமத்தில் நேற்று மாலை டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த டிராக்டர் சாலையில் பல்டியடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றினர். விசாரணையில் அவர்கள் அனைவரும் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.