VIDEO: ஆம்புலன்ஸும், காரும் 'நேருக்குநேர்' மோதி கோரவிபத்து.. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி.. பலியான டிரைவர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆம்புலன்ஸும் காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Ambulance van and car accident near puducherry caught on CCTV Ambulance van and car accident near puducherry caught on CCTV](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/ambulance-van-and-car-accident-near-puducherry-caught-on-cctv.jpg)
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது பெற்றோருடன் ஆம்புலன்ஸ் ஒன்றில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்துகொண்டு இருந்துள்ளார். அதேசமயம் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி அரசு பெண் பயிற்சி மருத்துவர் சீதாகுமாரி என்பவர் தனது காரில் வந்துகொண்டு இருந்துள்ளார்.
அப்போது கிருமாம்பாக்கம் காவல்நிலையம் எதிரே ஆம்புலன்ஸும் காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் காரில் இருந்த பெண் மருத்துவர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு காரின் பேனட்டில் விழுந்தார்.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்த போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)