‘144 தடை உத்தரவை மீறி’... ‘அசுரவேகத்தில் வந்த கார்’... ‘நொடியில் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பதற வைக்கும் காட்சிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்144 தடை உத்தரவை மீறி தருமபுரி அருகே வலம் வந்தவர்களை வழிமறித்த காவல் உதவி ஆய்வாளர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடெங்கும் கொரோனா வைரஸால் முடக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அல்லும் பகலும் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிச்சந்தை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சாரதி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக வழிமறித்து உள்ளார். ஆனால் காரின் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு அதிவேகத்துடன் அந்தக் கார் சென்றுவிட்டது.
இதனால் பதறிப்போன சக காவலர்கள் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடிய நிலையில் காரை ஓட்டி வந்த பழனி என்பவர் கைது செய்யப்பட்டார். கார் மோதி பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தருமபுரியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.