‘ஊரடங்கிலும் அடங்காத கார்!’.. ‘அசுர வேகத்தில் மோதி பறந்ததால் நடந்த பதறவைக்கும் சம்பவம்!’... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 15, 2020 04:55 PM

வெறுமையாக இருந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அங்குள்ள ரவுண்டானாவில் மோதி பறந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

car flies in an accident during curfew மேல பறந்து கார் விபத்து

போலந்து நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, அரசின் உத்தரவை மீறி அதிவேகமாக தனது காரை செலுத்தி வந்த ஓட்டுநர் ஒருவர், சாலையில் வளைவதற்கு பதிலாஜ நடுவே இருந்த ரவுண்டானாவின் மோதியுள்ளார்.  மோதிய வேகத்தில் ரவுண்டானாவின் மேல் பறந்து சென்று விழுந்த கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியது.

சாலையின்ன் ஓரம் வந்து காரை வளைக்க முயற்சித்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், நேரே சென்று ரவுண்டானா சுவரின் மீது மோதியதால் பறந்து சென்று விபத்துக்குள்ளானது. இதனால் ஓரிரு காயங்களுடன் , கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் வீடியோ காட்சிகளாக வலம் வருகிறது.