‘கொரோனா விடுமுறை’.. ஊட்டிக்கு டூர் போன கல்லூரி மாணவர்கள்.. பதபதைக்க வைத்த கோரவிபத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 19, 2020 09:39 AM

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Salem college student died in road accident near Avinashi

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் பாராமெடிக்கல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். கார் அவிநாசி அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் கார் டிரைவர் உட்பட 5 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கொரோனா விடுமுறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.