‘கொரோனா சிகிக்சைக்காக’... ‘மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்றபோது’... ‘2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு மருத்துவப் பொருள்களை ஏற்றி சென்றபோது விமானம் தீப் பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவர்கள் உள்பட 8 பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து நேற்று கொரோனா மருத்துவப் பொருள்களுடன் Lionair விமானம் புறப்பட்டது. அப்போது, திடீரென விமானம் தீப்பிடித்து எரிந்ததில், 2 மருத்துவர்கள், ஒரு செவிலியர், மூன்று விமான குழுவினர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே தீக்கு இரையாகினர்.
அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் விமானத்துறை அதிகாரிகள் Lionair நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளனர். புறப்பாட்டின்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறல் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏழு மாதங்களுக்குள் Lionair விமானம் இரண்டாவது முறையாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
