'இந்தியா' வல்லரசாக 'சுப்பிரமணியன் சுவாமி' தரும் சூப்பர் 'ஐடியா'... 'அது' மட்டும் நடக்கலன்னா, 'சீனாவுக்கு' டஃப் கொடுக்க 'முடியாது'...
முகப்பு > செய்திகள் > இந்தியா2030ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு, பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 10 சதவீதமாக வளர வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
![Subramanian Swamy\'s Idea as India\'s Economic Power Subramanian Swamy\'s Idea as India\'s Economic Power](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/subramanian-swamys-idea-as-indias-economic-power.jpg)
ஹைதராபாத்தில் 'இந்தியா - 2030 க்குள் ஒரு பொருளாதார வல்லரசு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற, பாஜக மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் பெற்றும், சீர்திருத்தங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்தியா தற்போது தேவைப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது. மக்கள் கையில் செலவு செய்ய பணமில்லை என வெளிப்படையாக கூறினார்.
அடுத்த 10 ஆண்டுக்கு பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் இருந்தால் தான் இந்தியா 2030ம் ஆண்டில் பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும் என்றும், இப்போது இருப்பது போன்ற வளர்ச்சியில் சென்றால், 50 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அமெரிக்கா, சீனாவுக்கு நம்மால் சவால் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி.,யை கொண்டு வந்தது தான். இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன என்றும் அவர் பேசினார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)