'ஏய்.. என்ன பண்ற?'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா?'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 28, 2019 11:26 PM
நாய், பூனை போன்ற விலங்குகள் மனிதர்களைக் கடிக்க செய்யும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் குளோரியா லான்கேஸ்டர், எட்மாண்ட் லான்கேஸ்டர் எனும் தம்பதியினர், தங்களின் வளர்ப்பு பிராணியான காது கேளாத நாயுடன் வன விலங்கு பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களின் வளர்ப்பு நாய் பூங்காவை சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தபோது, ஒட்டகத்தின் இருப்பிடத்திற்குள் சென்று மாட்டிக்கொண்டுள்ளது.
இதனால் செய்வதறியாது தவித்த குளோரியா மற்றும் எட்மாண்ட் தம்பதியினர் ஒட்டகத்தை விரட்டியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த ஒட்டகம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக குளோரியாவின் மீது அமர்ந்துள்ளது.
ஒட்டகத்தின் அடியில் சிக்கிக்கொண்ட குளோரியா பயத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வேறுவழியின்றி ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்துள்ளார்.
குளோரியா கடித்ததால் வலியில் இருந்த அந்த ஒட்டகத்திற்கு, தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனப்பூங்கா காவலர் கூறுகையில் லான்கேஸ்டர் தம்பதியினர், அவர்கள் வளர்த்த நாயை ஒட்டகம் சீண்டியதாக தங்களிடம் கூறியதாகவும், ஆனால் அவர்கள்தான் முதலில் ஒட்டகத்தை துன்புறுத்தி, சீண்டினர்; அதனால்தான் ஒட்டகம் அவர் மீது அமர்ந்ததாகவும் தெரிவித்தார்.