'நைட் 10.30 மணி இருக்கும்'.. 'ஓட்ட பிரிச்சு வீட்டுக்குள் எறங்கி'.. 'கழுத்த நெரிச்சு'.. மாற்றுத்திறனாளி வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 01, 2019 03:57 PM
நாகர்கோவிலைச் சேர்ந்த காட்டாத்துறை பகுதியில் பிறந்தவர் சுபஜா. 26 வயதான இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்துச் சம்பவத்தில் தனது கால்களை இழந்த நிலையில், தற்போது சிவகங்கையில் கடந்த 9 ஆண்டுகளாக, தனது தோழியின் உதவியுடன் வசித்து வருகிறார்.
மேலும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற வேட்கை கொண்ட சுபஜா, கூடைப்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட ஆங்காங்கே நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாய் பங்கேற்று வருகிறார். இவர் தன் மீது, தனது பக்கத்துவீட்டுக் காரர் கொலை முயற்சி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளதாக விகடனில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி பேசிய சுபஜா, தான் வசிக்கும் வீட்டில், தூங்கிக் கொண்டிருந்த சுபஜாவுக்கு இரவு 10.30 அணி அளவில், யாரோ வருவது போல் சத்தம் கேட்டதாகவும், எலி, பூனையாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டே லைட்டைப் போடும்போதுதான், பக்கத்துவீட்டு சேகர் என்பவர், ஓட்டைப் பிரிந்து, அவரது வீட்டுக்குள் நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், தான் ஆனால் சுதாரிக்கும் முன்பே, சேகர், சுபஜாவின் கழுத்தை நெரித்துக் கொலை முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சேகர் தன் கழுத்தை நெரித்தபோது, வீலென்று கத்தியதால் சிறுது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வந்து தன்னை காப்பாற்றியதாகவும் சுபஜா குறிப்பிட்டுள்ளார்.