‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 01, 2019 09:26 PM
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து கிண்டல் செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் கவுதம் கம்பீர்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 3வது போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், கராச்சி பகுதியில் இலங்கை அணிக்கு பிரதமருக்கு நிகரான உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதைக் கிண்டல் செய்து பாஜகவின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் சுமார் 20 வாகனங்கள் பாதுகாப்புடன் இலங்கை அணி அழைத்துச் செல்லப்படுகிறது. அந்தப் பதிவில் கம்பீர், “காஷ்மீரில் கவனம் செலுத்தும் பாகிஸ்தான் கராச்சியின் நிலை குறித்து மறந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Itna Kashmir kiya ke Karachi bhool gaye 👏👏😀 pic.twitter.com/TRqqe0s7qd
— Gautam Gambhir (@GautamGambhir) September 30, 2019
